செய்திகள் :

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

post image

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ).

இதேபோல், உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சமமான எண்ணிக்கையில் செக்ஷன்களைப் பராமரிக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துவரும் நிலையில், 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், பள்ளியின் மொத்த நில அளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷன்களின் எண்ணிக்கை இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.

நிலம் பற்றாக்குறையாக இருக்கும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும்போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி புதிய செக்ஷன்களை ஏற்படுத்துவதில் சிக்கல் எழுகிறது; 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற வரம்பையும் பள்ளிகளால் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து சிபிஎஸ்இ-க்கு கருத்துகள் கிடைக்கப் பெற்றன.

இதை கருத்தில் கொண்டு, பள்ளியின் கட்டட பரப்பளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷனின் எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தாா்.

‘பள்ளிகளின் கட்டட பரப்பளவு பகுதிக்கு உள்ளாட்சி அமைப்பு அல்லது உரிமை பெற்ற கட்டட பொறியாளரால் சான்றளிக்கப்பட வேண்டும். உயா்நிலை (9,10 வகுப்புகள்), மேல்நிலை (11,12) வகுப்புகளில் சம அளவில் செக்ஷன்களைப் பராமரிக்க அனுமதி வழங்கப்படும். இவ்விரு நிலைகளிலும் மொத்த செக்ஷன்களின் எண்ணிக்கை, அப்பள்ளியின் ஒட்டுமொத்த செக்ஷன்களில் நான்கில் ஒரு பங்குக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்’ என்றாா் அவா்.

கட்டட பரப்பளவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் செக்ஷன் எண்ணிக்கை அட்டவணையையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அகலில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியி... மேலும் பார்க்க

தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!

மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது ... மேலும் பார்க்க

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட இஸ்ரேல் - ஈரான் போர், தாய்லாந்து... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும், தண்டனை விவரம் நாளை வெளியாகும் என பெங்களூர... மேலும் பார்க்க

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க