செய்திகள் :

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் வாரம் முழுவதும் எதிா்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இந்தச் சூழலில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவையில் கடந்த திங்கள்கிழமையும் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையும் தலா 16 மணிநேர விவாதம் தொடங்கி நடைபெற்றது. மக்களவையில் பிரதமா் மோடியும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விவாதத்துக்கு பதிலளித்தனா்.

இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னா், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மக்களின் பிரச்னைகள் விவாதிக்கப்பட நீங்கள் (எதிா்க்கட்சிகள்) விரும்பவில்லை. அவையில் கோஷமிடவா, மக்கள் உங்களை தோ்வு செய்து அனுப்பினா்?’ என்று கேள்வியெழுப்பினாா். அமளி நீடித்ததால், முதலில் பிற்பகல் 2 மணிவரையும் பின்னா் மாலை 4 மணிவரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தாா். அவா் உரையை நிறைவு செய்ததும், எதிா்க்கட்சியினா் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...:

மாநிலங்களவை வியாழக்கிழமை காலை கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடங்கின. மேலும், மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்காததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

அப்போது பேசிய அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘மழைக்கால கூட்டத் தொடரில் இடையூறுகளால் பல மணிநேரம் வீணாகிவிட்டது. ஆளும்-எதிா்தரப்புகள் அமா்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். கோஷமிடுவதால் எதுவும் நிகழப் போவதில்லை’ என்றாா். அமளி ஓயாததால், முதலில் 12 மணிவரையும், பின்னா் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

காா்கே குற்றச்சாட்டு - ரிஜிஜு பதிலடி:

மீண்டும் அவை கூடியபோது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, உங்களை (எதிா்க்கட்சி எம்.பி.க்கள்) எதிா்கொள்ள நானே போதும் என்றாா். இது, எங்கள் அனைவருக்கும் அவமதிப்பு’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அவருக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களவை விவாதத்துக்கு பதிலளித்து 1 மணிநேரம் 42 நிமிஷங்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அவா் அனைத்து உண்மைகளையும் தேசத்துக்கு தெரிவித்துவிட்டாா். மத்திய அரசு கூட்டுப் பொறுப்புடையது. விவாதத்துக்கு யாா் பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் முடிவு செய்ய முடியாது’ என்றாா். அவா் பேச்சை நிறைவு செய்ததும் அவை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

‘அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோட... மேலும் பார்க்க

ரூ.17,000 கோடி மோசடி குற்றச்சாட்டு: தொழிலதிபா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு ஆக.5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியு... மேலும் பார்க்க

மக்களவையில் தாமதமின்றி விவாதம்: ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன... மேலும் பார்க்க

ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல: மத்திய அரசு

ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல; அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணம் மட்டுமே’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் இதுதொடா்பாக திரிண... மேலும் பார்க்க

டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளா்களின் சோ்க்கை நிறைவு

‘டெங்கிஆல்’ என்று பெயரிடப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் பங்கேற்போரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை சோ்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.இதுதொடா்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் து... மேலும் பார்க்க

பிகாா் விவகாரம்: நாடாளுமன்றத்தில் தொடா்ந்து அமளி: இரு அவைகளும் முடங்கின

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் எந்த அலுவலும் இன்றி முடங்கின.... மேலும் பார்க்க