``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்
தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!
தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்கள் கௌஸ் மீரா, மொஹியுதீன், சலபதி ராவ் சுத்தாலா, வகிதி ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் காடி பிரவீன் குமார் ஆகியோர் ஆவார்.
நான்கு கூடுதல் நீதிபதிகளின் நியமனம் ஜூலை 28 அன்று குடியரசுத்தலைவர் முர்முவால் உறுதி செய்யப்பட்டது.
கூடுதல் நீதிபதிகள் இரண்டு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள், பின்னர் நீதிபதிகளாக அல்லது நிரந்தர நீதிபதிகள் என்ற பதவி உயர்வு பெறுகிறார்கள்.