தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்
பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தான் காதலில் இருப்பதை உறுதிசெய்துள்ளார். ஆனால், அவர் ரஷ்மிகா பெயரைக் குறிப்பிடவில்லை.
இருவருமே இதுவரை வெளிப்படையாக தங்களின் காதல் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பதும் குறிப்பிடவில்லை.
ரஷ்மிகாவின் பாராட்டும் விஜய் தேவரகொண்டா வைத்த பட்டப்பெயரும்...
ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலரைப் பகிர்ந்த ரஷ்மிகா, “ஜூலை 31 வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. விஜய் தேவரகொண்டாவிடம் நெருப்பைப் பார்க்க முடிகிறது.
அனிருத், கௌதம் தின்னனுரி, விஜய் என 3 அறிவுஜீவிகள்... இவர்கள் கூட்டணியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு விஜய் தேவரகொண்டா, “ருஷிலு... (Rushhielu) ஹார்டின் எமோஜி... கிங்டம் டிரைலரைப் பார்த்து மகிழ்” எனக் கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் பாராட்டும் ரஷ்மிகா வைத்த பட்டப்பெயரும்...
இதற்கு முன்பாக மைசா போஸ்டரை பகிர்ந்து விஜய் தேவரகொண்டா,” இது பயங்கரமாக இருக்கப்போகிறது” என வாழ்த்தியிருந்தார்.
அந்தப் பதிவைப் பகிர்ந்த ரஷ்மிகா, “விஜூ.... (Vijuuu) இந்தப் படத்தில் நான் உன்னைப் பெருமைப்பட வைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

இருவருமே சமூக வலைதளங்களில் இப்படி பாராட்டிக் கொள்வதும் கொஞ்சிக் கொள்வதும் காதலை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
கிங்டம் திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இருவரும் காதலை எப்போது பொதுவெளியில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.