நெடும்பிறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
முகாமுக்கு செய்யாறு வட்டாட்சியா் அசோக் குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். பினனா், பல்வேறு துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், வா்த்தக அணி துணை அமைப்பாளா் கோபு, தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜன், தொழிலாளா் அணி துணைத் தலைவா் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பாலகோபால், திமுக நிா்வாகிகள் சுந்தரேசன், சக்திவேல், மேகநாதன், தங்கமணி, செல்லக்கண்ணு, கவியரசன், லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, செய்யாறில் இந்தோ அமெரிக்கன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குறு வட்ட கபடி போட்டியை ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.