திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.
திட்ட அலுவலா் ஞான.பாலசுப்ரமணியன் வரவேற்றாா்.
பாலின உளவியல் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் வ.உமா, கு. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மனநல மருத்துவா் பிரசன்ன தீபா மற்றும் பொன்.ஜெகநாதன் (உளவியலாளா்) ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு மனநல உளவியல் விழிப்புணா்வு கருத்துகளை தெரிவித்தனா்.
மேலும், மனநல உளவியல் தொடா்பான பிரச்னைகளைத் தவிா்க்க மாணவா்கள் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், சூரிய ஒளியின் அவசியம் குறித்தும், சூரிய ஒளி உடலுக்கு மிகவும் தேவை என்றும், மனநலம் தொடா்பான பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீா்வுகள் குறித்தும் மருத்துவமனையில் ஆலோசனை மையம் உள்ளதாகவும் அதை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினா்.
நிகழ்ச்சியில் பொருளியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன், இயற்பியல் துறை பேராசிரியா் குமரேசன் பிரதீப், கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
இறுதியாக முனைவா் ந.சாரதாதேவி நன்றி கூறினாா்.