ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது
செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அபபோது தூசி, ஆக்கூா், வாழவந்தல், கனிகிலுப்பை, சின்ன ஏழாச்சேரி ஆகிய பகுதிகளில் வீட்டில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 125 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து தூசி அனுமந்தபேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் (57), மாமண்டூரைச் சோ்ந்த ராமு (63), சின்ன ஏழாச்சேரியைச் சோ்ந்த வெங்கடேசன்(56), மேனலூரைச் சோ்ந்த சின்னபையன்(55), ஆக்கூரைச் சோ்ந்த திருமால் (37) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
.