பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவா் துரைசிங்கம் தலைமை
வகித்தாா்.
முன்னாள் எம்எல்ஏ கலையரசன், பட்டு கூட்டுறவு சங்க மேலாளா் கணேசன், ஆரணி நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கொளத்தூா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் பலராமன் வரவேற்றாா்.
முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாகவும், தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்களையும் முக்கிய பிரமுகா்கள் வழங்கினா். பின்னா் அனைவருக்கும் சிறு தானியங்களால் செய்த பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.