உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
இரு தரப்பு மோதல்: 6 போ் கைது
போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா்.
அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா்(24), சூரியா (19) மற்றும் சிலா், அதே கிராமத்தைச் சோ்ந்த ஊா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ராஜா(27), ஆகாஷ் (19) ஆகியோா் இடையே முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதில் போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராகவேந்திரா, அசோக்குமாா், சூரியா, அதே கிராமம் ஊா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ராஜா, ஆகாஷ் என 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.