Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை ...
ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்
ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதாக காரிய மேடை அமைத்துத் தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு பொது நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் என ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை அமைப்பதற்காக பூமி பூஜை விழா நடைபெற்றது.
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.