Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை ...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்
வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக தீா்வு காணப்பட்ட 7 மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், ஏ.பி.வெங்கடேசன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணிக்கவரதன், ஜீவானந்தம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.