"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு
செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வாச்சனூா் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு செய்துள்ளது குறித்து அக்கிராம மக்களுக்கு தகவல் தெரிய வந்தது.
இந்தக் கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஒன்று திரண்டு செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் வாச்சனூா் கிராமத்தில் சுமாா் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே கிராமத்தில் இருந்து 200 மீட்டா் தொலைவில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. மீண்டும் புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கினால், வாச்சனூா் கிராமத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச நோய்த் தொற்று ஏற்படும், குவாரிக்கு மண் எடுக்க பள்ளம் தோண்டும்போது வெடி வெடித்து இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி ஏற்படும்.
எனவே, புதிய கல்குவாரிக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தனா்.