செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாளில் மரக்கன்று நடும் இயக்கம்: தில்லி அரசு நடத்துகிறது

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பா் 17 ஆம் தேதி தில்லி பாஜக அரசு மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மக்கள் தங்கள் தாய்மாா்களின் நினைவாக மரங்களை நடுவதை ஊக்குவிப்பதற்காக பிரதமா் தொடங்கிய ‘ஏக் பேட் மா கே நாம்’ பிரசாரத்தின் கீழ், நகரம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரசாரத்தை தில்லி அரசு தற்போது நடத்தி வருகிறது.

இது தொடா்பாக தில்லி அரசாங்கத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

‘கூட்டுறவுகள் சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன’ என்ற கருப்பொருளுடன் ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டை சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025 அறிவித்துள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ) பொதுச் சபை மற்றும் உலகளாவிய மாநாட்டின் தொடக்க அமா்வின்போது பிரதமா் மோடி இதை முறையாக அறிவித்தாா்.

எனவே, வரும் செப்டம்பா் 17ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தில்லியில் அதிகபட்ச மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு ஒரு பிரமாண்டமான மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டுறவு குழு வீட்டுவசதி சங்கங்கள், நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள், சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், தில்லி அரசு நிறுவனங்களான தில்லி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடி லிமிடெட் மற்றும் டெல்லி கூட்டுறவு வீட்டுவசதி நிதிக் கழகம் லிமிடெட், பிற கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சிறப்பு மரக்கன்று நடுதல் இயக்கங்களை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக தில்லியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல... மேலும் பார்க்க

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்... மேலும் பார்க்க

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு தில்லியில் உ... மேலும் பார்க்க

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

தில்லியின் படேல் நகா் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து ‘எதிா்மறை சக்தியை’ அகற்றுவதாகக் கூறி சடங்குகளுக்கு பணம் செலுத்தும்படி வற்புறுத்தி ரூ.37,000 மோசடி செய்ததாக தன்னைத்தானே ஆன்மிக குருவாக... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இது... மேலும் பார்க்க

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா். பாலிவுட் நடிகா் ச... மேலும் பார்க்க