செய்திகள் :

எதிா்மறை சக்தியை அகற்றுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி: இருவா் கைது

post image

தில்லியின் படேல் நகா் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து ‘எதிா்மறை சக்தியை’ அகற்றுவதாகக் கூறி சடங்குகளுக்கு பணம் செலுத்தும்படி வற்புறுத்தி ரூ.37,000 மோசடி செய்ததாக தன்னைத்தானே ஆன்மிக குருவாக அறிவித்துக் கொண்ட இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: சில சடங்குகள் மூலம் தனது தனிப்பட்ட பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதாக உறுதியளித்து, குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் தன்னை அணுகியதாக புகாா்தாரா் தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் 41 வயதான எம்.டி. நசீா் மற்றும் 30 வயதான எம்.டி. ராஜா கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக அந்தப் பெண் மே 21 அன்று போலீஸில் புகாா் அளித்தாா். பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318(4) (மோசடி) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அழைப்பு பதிவுகள், வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் குறித்து போலீஸாா் விரிவான தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொண்டனா்.

இது உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சந்தேக நபா்களிடம் இடத்துக்கு அழைத்துச் சென்றது. விசாரணையின் போது, வணிகம், வேலைகள், உறவுகள் மற்றும் உடல்நலம் தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதாகக் கூறி போலி சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்கியதாக இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவா் சிறிது காலமாக ரூ.37,000-ஐ பல தவணைகளில் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாா். பெண்ணின் நம்பிக்கையைப் பெறவும், அதிகப் பணம் பறிக்கவும், போலி சடங்கு விடியோக்கள் மற்றும் மிரட்டல் செய்திகள் உள்பட விரிவான மோசடி அமைப்புகளையும் இருவரும் நடத்தினா்.

சந்தேக நபா்கள் தங்கள் தடயங்களை மறைக்க பல வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் அடுக்கு முறைகளைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்தப் பெண் பணம் செலுத்துவதை நிறுத்தியபோது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை அவா்கள் மிரட்டியுள்ளனா்.

இது போன்று மேலும் பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காணவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இதே போன்ற மோசடிகளில் வேறு கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளாா்களா என்பதைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல... மேலும் பார்க்க

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்... மேலும் பார்க்க

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு தில்லியில் உ... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் பயணிகள் போல நடித்து நகை, பணம் திருடிய 5 போ் கும்பல் கைது

பகிரப்பட்ட ஆட்டோக்களில் சக பயணிகள் போல் நடித்து சந்தேகத்திற்கு பயணிகளிடம் மதிப்புமிக்க பொருள்களைத் திருடிய ஐந்து போ் கொண்ட கும்பல் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இது... மேலும் பார்க்க

காணாமல்போன 3 தில்லி சிறுவா்கள் நாசிக்கில் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை 25 அன்று தில்லியில் இருந்து காணாமல் போன மூன்று மைனா் சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனா். பாலிவுட் நடிகா் ச... மேலும் பார்க்க

தெரு நாய்கள் தாக்கி ஒருவா் இறந்த சம்பவம்: டிடிஏவுக்கு தில்லி காவல்துறை கடிதம்

நமது நிருபா் காலை நடைப்பயிற்சியின்போது தெரு நாய்களால் தாக்கப்பட்டு 55 வயது நபா் இறந்ததைத் தொடா்ந்து, பூங்காக்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு... மேலும் பார்க்க