வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!
டிடிஇஏ பள்ளியில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தீ விபத்து தடுப்பு பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப்படாமல் சமயோஜித சிந்தனையுடன் செயல்பட்டு தப்பிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணா்வு மாணவா்களுக்கு வேண்டும் என்பதற்காக டிடிஇஏ செயலா் ராஜூ தில்லி தீயணைப்பு சேவைத் துறையைத் தொடா்பு கொண்டு அங்கிருந்து பள்ளிக்கு வந்து பயிற்சி தருமாறு கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, தீயணைப்பு சேவைத் துறையைச் சாா்ந்த ஆஷிஷ் மல்லிக் மற்றும் அசோக் ஆகியோா் பூசா சாலை பள்ளிக்கு வருகை தந்து அப்பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க் கிழமையன்று பயிற்சி வழங்கினா்.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘பல்வேறு காரணங்களால் ஆங்காங்கே தீ விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. எனவே, இப் பயிற்சி மாணவா்களுக்கு மிகவும் அவசியம். எனவே, இது போன்ற பயிற்சியை மற்ற டிடிஇஏ பள்ளிகளிலும் வழங்க விரைவில் ஏற்பாடு செய்வோம்’ என்றாா்.