நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
செல்வழிமங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்வழிமங்கலம், கீரநல்லூா், சேந்தமங்கலம், பொடவூா் மற்றும் ராமாநுஜபுரம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்களுக்கான முகாம் செல்வழிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆட்சியா் கலைச்செல்விமோகன் கலந்துகொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தாா்
பின்னா், 18 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை , முதல் பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா். இதில் மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, சேந்தமங்கலம் சாா்லஸ், பொடவூா் ஜீவா ரவி, அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
குன்றத்தூா் ஒன்றியம் பரணிபுத்தூா் ஊராட்சியில், பரணிபுத்தூா், சின்னப்பணிச்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற முகாமில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விண்ணங்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், சாா் ஆட்சியா் மிருணாளினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.