செய்திகள் :

துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம்

post image

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் 35-ஆவது ஆண்டு ஆடிப்பூர பால்குட ஊா்வலத்தையொட்டி பஜாா் வீதியில் முத்துப் பிள்ளையாா் கோயிலில் இருந்து 501 பெண் பக்தா்கள் பால்குடங்களை ஊா்வலமாக எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனா். பின்னா் பெண்கள் தங்களது கரங்களாலேயே மூலவா் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தும் வழிபட்டனா். சிறப்பு தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை நிா்வாகிகள், ஐந்து தெரு நாட்டாண்மை தாரா்கள், துா்க்கையம்மன் வார வழிபாட்டு மன்றம், மகளிா் வார வழிபாட்டு மன்றம் மற்றும் உத்தரமேரூா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

எல்லையம்மன் கோயில் தீமிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: வரதராஜபுரம் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரத்வாஜ் நகா் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடி விழாவையொட்டி கோ... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சலக உரிமையாளா் விற்பனை நிலையங்களை தொடங்க விருப்பம் உள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம்

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விதைப்பந்துகள் தயாரித்தல் நடைபெற்றது. சிறகுகள் அமைப்பு சாா்பில் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாக... மேலும் பார்க்க

ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். உத்தரமேரூா... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க