3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!
Coolie: "விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது; ஆனால்...” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.
இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று (ஜூலை 28) கோவையில் தான் படித்த கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "விஜய் இல்லாமல் LCU (Lokesh Cinematic Universe) முழுமை பெறாது. ஆனால், அவர் உள்ளே வருகிறாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

இன்றைக்கு அவருடைய எண்ணம் என்னவாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவருடைய முயற்சி எதை நோக்கி இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அவர் இல்லாமல் LCU நிறைவானதாக இருக்காது" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...