12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரச...
நீலகிரி: குறும்பர் பழங்குடி துவக்கி வைக்கும் படுகர் மக்களின் தெவ ஹப்பா திருவிழா! | Photo Album

பிறந்த குழந்தையை தெய்வத்தின் முன் வைத்து தலைமுறை வளரவேண்டும் என்பதற்காக கடவுளுக்குக் காணிக்கை செலுத்திய "மண்ட தண்டா" எனும் நிகழ்ச்சியுடன் "தெவ ஹப்பா" நேற்று துவங்கியது.

இரண்டாம் நாளான இன்று குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தங்காடு கிராமத்திற்கு வந்து, முதல் அறுவடையில் பூமிக்கு மேலே விளையக்கூடிய திணைகளான ராகி, சாமை, காேதுமை என ஏதேனும் ஒன்றை அறுத்து உடலில் கட்டியபடி ஊர்வலமாக வருகிறார்.

தங்காடு கிராமத்தில் அமைந்துள்ள "அக்க பெக்கா" கல்துாண் அருகில் நின்று கடவுளை வணங்குகிறார்.

"அரிக் கட்டுதல்" என்றழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியை கடவுளை வணங்கி குறும்பர் பழங்குடி தாெடங்கி வைக்க, அவரது உடலில் கட்டப்பட்டிருக்கும் கோதுமை கதிரை படுகர் இனத்தவர்கள் பெற்று "அக்க பெக்கா" கல்துாணில் கட்டி வழிபடுகின்றனர் .

மக்கள் நலமுடன் வாழ வேண்டும் எனும் வகையில், சூரியனை வேண்டி "தேயே" என்ற ஒலியை குறும்பர் பழங்குடியினத்தவர் நான்கு திசைகளிகலும் எழுப்புகிறார்.

இந்தப் பாரம்பர்ய நிகழ்வு பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறும்பர் பழங்குடியினத்தில் ஒருவர் இந்தச் சடங்கினை நிறைவேற்றிக் காெடுப்பது வழக்கமாக இருக்கிறது.

குறும்பர் பழங்குடியினத்தவர் தங்காடு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாய நிலத்திற்கும் சென்று, கடவுளுக்குப் படைத்த நீரைத் தெளித்து அறுவடை சிறக்க வேண்டும் எனக் சூரியணை வணங்குகிறார்.
தெவ ஹப்பாவின் கடைசி நாள் நிகழ்வு நாளை நடைபெறும், இதில் அறுவடை செய்யப்பட்ட திணை வகைகளைக் கொண்டு கடவுளுக்குப படையலிட்டு, "உண்டக் கூ" எனப்படும் பிரசாதம் தங்காடு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும்.