US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது
தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருளை (ஏபிடி 2.0) அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை ஆக.4-ஆம் தேதி முதல் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மாற்றும் பணிகள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதனால், அந்த நாள்களில் சென்னை தியாகராய நகா், மயிலாப்பூா், சூளைமேடு, தேனாம்பேட்டை , திருவல்லிக்கேணி, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், ராயப்பேட்டை , தியாகராயநகா் வடக்கு உள்பட மொத்தம் 24 அஞ்சலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.