செய்திகள் :

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

post image

மும்பை: உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தன.

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 281.01 புள்ளிகள் உயர்ந்து 81,618.96 என்ற உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 143.91 புள்ளிகள் உயர்ந்து 81,481.86 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 33.95 புள்ளிகள் உயர்ந்து 24,855.05 ஆக நிலைபெற்றது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து சந்தையின் ஏற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஜூன் வரையான காலாண்டில், பன்னாட்டு நிறுவன ஆர்டர்களின் வலுவான வளர்ச்சியால், உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.8 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து அதன் பங்குகள் 4.87 சதவிகிதம் உயர்ந்தன.

சென்செக்ஸில் சன் பார்மா, என்டிபிசி, மாருதி, பாரதி ஏர்டெல், டிரென்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் எல் அண்ட் டி, டாடா கன்ஸ்யூமர், என்டிபிசி, சன் பார்மா, மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.4,636.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

ஸ்காட்லாந்திலிருந்து வாஷிங்டன் திரும்பும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு டிரம்ப் பதில் வருமாறு:

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகவில்லை என்ற நிலையில், வேறு எந்த நாட்டையும் விட அதிக வரிகளை இந்தியா விதிக்கிறது.

20 முதல் 25 சதவிகிதம் வரை அதிக அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருவதாக வெளியான செய்திகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், நான் அப்படித்தான் நினைக்கிறேன் என்றார்.

சந்தைகள் கலவையான குறிப்புகளுக்கு மத்தியில் ஓரளவு உயர்ந்து முடிந்தது. ஒரு சீரான தொடக்கத்திற்குப் பிறகு, நிஃப்டி இறுதியாக 24,855.05ல் நிலைபெற்றது.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் முடிந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிந்தன.

உலகளாவிய கச்சா எண்ணெய் 0.44 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 72.19 அமெரிக்க டாலராக உள்ளது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்ப... மேலும் பார்க்க

8% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 8 சதவீதமும், மொத்த விற்பனை மதிப்பில் 18 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இத... மேலும் பார்க்க

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான முதல் காலாண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் சரிந்து ரூ.1,369 கோடியாக உள்ளது. விற்பனை குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.அரசுக்குச் சொந்தம... மேலும் பார்க்க

பவர் கிரிட் முதல் காலாண்டு லாபம் 2.5% சரிவு!

புதுதில்லி: அதிக செலவுகள் காரணமாக, 2025-26 ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.5 சதவிகிதம் குறைந்து ரூ.3,630.58 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் குறைந்து ரூ.87.43 ஆக நிறைவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிக... மேலும் பார்க்க