கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் கா...
பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!
பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காதது, அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பதில் ஆகியவற்றால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியில் இருந்தார்.
மேலும், தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னா் தனக்கு நெருக்கமான ஆதரவாளா்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இன்று(ஜூலை 31), காலை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுகிறது.
பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்று நாடே அறியும். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் ஓபிஎஸ் சந்திப்பார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடான சந்திப்பு குறித்து பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது” என்றார்.
இதையும் படிக்க: இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?