உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் ...
பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!
புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
அரசுக்குச் சொந்தமான வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,252 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் ரூ.32,166 கோடியிலிருந்து ரூ.37,232 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.31,964 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.28,556 கோடியாக இருந்தது.
வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.7,081 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.6,581 கோடியாக இருந்தது.
இருப்பினும், இந்தக் காலாண்டில் வரிச் செலவுகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ.5,083 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.2,017 கோடியாக இருந்தது.
ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் முதல் காலாண்டில் ரூ.323 கோடியாக குறைந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் ரூ.1,312 கோடியாக இருந்தது.