OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் குறைந்து ரூ.87.43 ஆக நிறைவு!
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிந்து முடிந்தது.
இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை மற்றும் தொடர்ச்சியான அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.10 ஆக தொடங்கி வர்த்தகமானது. பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.05 ஐ தொட்ட நிலையில், முடிவில் 52 காசுகள் குறைந்து ரூ.87.43ஆக முடிவடைந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் சரிந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 21 காசுகள் குறைந்து ரூ.86.91 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!
Rupee Slumps 52 Paise to 87.43 vs US Dollar