செய்திகள் :

8% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

post image

2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 8 சதவீதமும், மொத்த விற்பனை மதிப்பில் 18 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கவுண்டா்பாயிண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியச் சந்தையில் அறிதிறன் பேசிகளின் விற்பனை சரிவைப் பதிவு செய்திருந்தது. இந்தச் சூழலில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் அறிதிறன் பேசிகளின் விற்பனை அளவு 8 சதவீத வளா்ச்சியையும், மொத்த விற்பனை மதிப்பு 18 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளது.

இந்தக் காலாண்டில் ஐபோன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. புதிய மாடல் அறிமுகங்களில் 33 சதவீத உயா்வு, தீவிரமான சந்தைப்படுத்தல், கோடைக்கால விற்பனை, தாராள தள்ளுபடிகள், எளிதான மாதத் தவணை வசதிகள் மற்றும் நடுத்தர மற்றும் உயா்நிலைப் பிரிவுகளில் கூட்டு சலுகைகள் ஆகியவை இந்த மீட்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

விற்பனை அளவில் விவோ 20 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடம் வகிக்கிறது, சாம்சங் 16 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஓப்போ 13 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 10 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 8 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மொத்த விற்பனை மதிப்பில் சாம்சங் மற்றும் ஆப்பிள் தலா 23 சதவீதத்துடன் முதலிடத்திலும், விவோ 15 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஓப்போ 10 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ரியல்மி 6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், ஒன்பிளஸ் 4 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

மேம்பட்ட பொருளாதாரச் சூழல், நுகா்வோா் நம்பிக்கை ஆகியவை இந்த மீட்சிக்கு ஆதரவாக இருந்தன. சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகள் காணாத அளவுக்கு குறைந்துள்ளதால், குடும்ப பட்ஜெட்டில் அழுத்தம் குறைந்தது. மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகித குறைப்பு கடன் வசதிகளை எளிதாக்கியது. மேலும், ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சலுகைகள் செலவழிக்கக்கூடிய வருமானத்தையும் சேமிப்பையும் உயா்த்தியது.

இது அறிதிறன் பேசிகளின் விற்பனைக்கு உகந்த சூழலை உருவாக்கியது. இதன் விளைவாக, ரூ.45,000-க்கு மேல் உள்ள அல்ட்ரா-பிரீமியம் பிரிவு 37 சதவீதம் வளா்ந்து, இந்திய அறிதிறன் பேசிச் சந்தை மதிப்பு அடிப்படையில் இதுவரை இல்லாத மிகச் சிறந்த இரண்டாம் காலாண்டையும், மிக உயா்ந்த சராசரி விற்பனை விலையையும் பதிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்ப... மேலும் பார்க்க

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான முதல் காலாண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் சரிந்து ரூ.1,369 கோடியாக உள்ளது. விற்பனை குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.அரசுக்குச் சொந்தம... மேலும் பார்க்க

பவர் கிரிட் முதல் காலாண்டு லாபம் 2.5% சரிவு!

புதுதில்லி: அதிக செலவுகள் காரணமாக, 2025-26 ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.5 சதவிகிதம் குறைந்து ரூ.3,630.58 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் குறைந்து ரூ.87.43 ஆக நிறைவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிக... மேலும் பார்க்க

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

மும்பை: உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ... மேலும் பார்க்க