OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்...
பவர் கிரிட் முதல் காலாண்டு லாபம் 2.5% சரிவு!
புதுதில்லி: அதிக செலவுகள் காரணமாக, 2025-26 ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.5 சதவிகிதம் குறைந்து ரூ.3,630.58 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.3,723.92 கோடியாக இருந்தததாக தெரிவித்தது.
இருப்பினும், மொத்த வருமானம் ரூ.11,279.59 கோடியிலிருந்து ரூ.11,444.42 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் மொத்த செலவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.6,643.07 கோடியிலிருந்து ரூ.7,114.23 கோடியாக அதிகரித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான தனியார் வைப்புத்தொகையின் கீழ் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவது உள்பட பல்வேறு ஆதாரங்கள் வழியாக கடன் வாங்கும் வரம்பை ரூ.16,000 கோடியிலிருந்து ரூ.25,000 கோடியாக உயர்த்த வாரியம் ஒப்புதல் அளித்தது.
2026-27 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆதாரங்களில் வழியாக ரூ.30,000 கோடி வரை திரட்டுவதற்கான திட்டத்திற்கும் வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் குறைந்து ரூ.87.43 ஆக நிறைவு!