நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை #VikatanPhotoCards
ஆஸி. ஒருநாள் தொடர்: வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யு-19 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் மற்றும் மேக்கேயில் நடைபெறுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்து அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அணி விவரம்
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் சிங், தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் பட்டேல், உதவ் மோகன், அமன் சௌகான்.
India announce men’s U19 squad for series against Australia
இதையும் படிக்க :35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!