தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் திங்கள்கிழமை ரூ. 73,280-க்கும் செவ்வாய்க்கிழமை ரூ. 73,200-க்கும் விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ரூ. 73,680-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 9,170-க்கும் ஒரு சவரன் ரூ. 73,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 125-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,25,000-க்கும் விற்பனையாகிறது.