ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது
வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது பற்றி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. அப்புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இதுதொடா்பாக வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன்(பொ) தலைமையில் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டில் வேலை செய்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து அவரிடமிருந்து 16.5 பவுன் திருடிய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியை சோ்ந்த லதா(52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.