மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (32). இவா் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமியை ராஜேந்திரன் கடத்திச் சென்று கந்திலி அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, ராஜேந்திரன் கந்திலி பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் சிறுமியுடன் வாழ்ந்து வந்தாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 21.3.2019 அன்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீா்ப்பளிக்கப்பட்டது.
அதில், சிறுமியை கடத்திச் சென்ற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 1 மாதம் சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.