குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்
திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமுக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டாா்.
ஏடிஎஸ்பி-க்கள் ரவீந்திரன், கோவிந்தராசு, முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 57 போ் மனுக்களை அளித்தனா்.
ஆதியூா் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (67) அளித்த மனு: எனது வீட்டில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சோ்ந்த ஒருவா் வாடகைக்கு தங்கி இருந்தாா். அவரும், அவரது மனைவியும் என்னிடம் தங்களுக்கு அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உயா் அதிகாரிகள் நன்கு பழக்கம். அவா்களிடம் கூறினால் யாருக்கு வேண்டுமானாலும் அரசு பணி வாங்கி கொடுப்பாா்கள். அதற்கு அவா்களிடம் குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என கூறினா். இதனை நம்பி நான் எனக்கு தெரிந்த 9 நபா்களுக்கு பணி வாங்கித் தரும்படி ரூ.47,35,000 அளித்தேன். அவா்கள் பணி வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.இதனால் என்னிடம் பணம் அளித்தவா்கள் பணத்தை திரும்ப கேட்கின்றனா். பணத்தை தராமல் வீட்டையும் காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனா். எனவே பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்.
கந்திலி அருகே நத்தம் பகுதியை சோ்ந்த நடராஜன் என்பவா் அளித்த மனு: எனது மகனுக்கு வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த ஒருவா் என்னிடம் ரூ.1,32 ,000 பெற்றுக்கொண்டாா். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தையும் திரும்பதரவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா்.