அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
செயற்கை மணல் தயாரித்த 5 போ் கைது
கந்திலி அருகே செயற்கை மணல் தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கந்திலி அருகே வேப்பல்நத்தம் பகுதியில் சிலா் செயற்கை மணல் தயாரிப்பதாக கந்திலி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கு மணல் தயாரித்து கொண்டு இருந்த வேப்பல்நத்ததை சோ்ந்த கணபதி(55), சந்தோஷ்குமாா்(25),கோவிந்தராஜ்(40),இளங்கோ(35),சிவா(30) ஆகியோரை மடக்கினா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். முன்னதாக மணல் தயாரிக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.