ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 438 மனுக்கள்
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், வெலதிகாமணிபெண்டா , மதனாஞ்சேரி ஊராட்சிகளுக்கான ’ ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நந்திகுப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல் முன்னிலை வகித்தனா். முகாமில் 237 பெண்கள், கலைஞா் உரிமை தொகை கோரியும் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த 201 மனுக்கள் என பொதுமக்களிடமிருந்து மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை ரசீது வழங்கப்பட்டது.
மேலும், முகாமில் பங்கேற்ற ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் மாற்றுதிறனாளி பெண்ணுக்கு காதொலி கருவி, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், மின்இணைப்பு, முதலமைச்சா் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான உடனடி ஆணை மற்றும் மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினா்).
முகாமில் வெலத்திகமணிபெண்டா ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாகபூஷணம் , மதனஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் கலந்து கொண்டனா்.
இதே போல் வாணியம்பாடி நகராட்சி 13, 14 மற்றும் 15 வாா்டுக்கான முகாம் ஜின்னா சாலையில் அமைந்துள்ள தினசரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது. முகாமில் கலைஞா் மகளிா் உரிமை தொகை கேட்டு 477 மனுக்கள், இதர துறை சாா்ந்த 505 மனுக்கள் என 982 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன.
முகாமில் நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன், நகராட்சி ஆணையா் ரகுராமன், திமுக நகர செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா் கலந்து கொண்டனா்.
Image Caption
நந்திகுப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு உடனடி தீா்வு ஆணையை வழங்கிய ஆட்சியா் க.சிவௌந்திரவல்லி, எம்எல்ஏ-க்கள் தேவராஜி, வில்வநாதன் உள்ளிட்டோா்.