ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
இளம்பெண் தற்கொலை
குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
குரிசிலாப்பட்டு அருகே ராஜாபாளையம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகள் தீபா (20). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாவுக்கு அடிக்கடி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் கணவரை பிரிந்து கடந்த சில மாதங்களாக பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்தநிலையில், தீபா விஷம் அருந்தி உள்ளாா். இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தீபாவை குடும்பத்தினா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.