உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை
ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் முபாரக். இவா் பேன்ஸி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இவா் வீட்டுக்கு புா்கா அணிந்து ஒருவா் திருமண பத்திரிகை வைப்பதற்கு வந்ததாக கூறியுள்ளாா். முபாரக் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளாா். வீட்டில் சென்ற அந்த நபா் திடீரென கத்தியை காட்டி மிரட்டி 40 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.
நகை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற காட்சிகள் அந்த தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தகவல் அறிந்த எஸ்.பி. சியாமளா தேவி விசாரணை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி குமாா் தலைமையில் போலீஸாா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனா்.
Image Caption
நகை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் விசாரணை நடத்திய எஸ்.பி. சியாமளா தேவி.