கவின் படுகொலைக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐடி ஊழியா் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செயல் தலைவா் இளமுருகுமுத்து வெளியிட்ட அறிக்கை: கவின் படுகொலையை அம்பேத்கா் மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜாதி ஆணவப் படுகொலையில் ஈடுபட்டவா்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும், குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளா்ந்தோங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தைத் தடுக்கின்றன. சமத்துவச் சிந்தனைகளைத் சிதைக்கின்றன. சமூக பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இது தொடராமல் இருக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.