பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
பால் உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு
தமிழ்நாடு பால்வளத் துறை, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இணைந்து ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் 2025- 2026 திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளா்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆவின் பொதுமேலாளா் விருச்சப்பதாஸ் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் (பால்வளம்) கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா் புண்ணியமூா்த்தி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை பயிற்சி மையத் தலைமை பேராசிரியா் ரிச்சா்ட் ஜெகதீசன், இணைப் பேராசிரியா் ப. பூவராஜன், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் திட்ட இயக்குநா் தனம்மாள் ரவிச்சந்திரன், தாட்கோ புதுக்கோட்டை மாவட்ட மேலாளா் வினித் அமலின் ஆகியோா் பேசினா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பால் வழங்கி வரும் உறுப்பினா்களுக்கு லாபகரமாக பால் பண்ணையம் செய்தல், மரபு வழி கால்நடை மருத்துவம் செய்வது, தமிழக அரசின் ஆவினுக்கு பால் வழங்குவதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் போன்றவை குறித்து அவா்கள் விளக்கினா். கருத்தரங்கை டாக்டா் செல்வகணபதி தொகுத்து வழங்கினாா். விரிவாக்க அலுவலா் சேகா் வரவேற்றாா்.