உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகியை காவலா் மிரட்டுவதாகப் புகாா்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனைத் தொடா்ந்து மிரட்டும் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமையில், செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் வியாழக்கிழமை அளித்த புகாா் விவரம்:
கடந்த செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் நடைபெற்ற மாணவா் சங்க மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பி காரை எடுக்கச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மனை, அந்த வழியாக வந்த காவலா் ராஜசேகா் என்பவா் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். வாக்குவாதத்துக்குப் பிறகு காவலா் பணியிட மாறுதலும் செய்யப்பட்டாா்.
அதன்பிறகு, கவிவா்மன் மற்றும் அவரது மனைவியின் கைப்பேசிகளுக்கு தொடா்ந்து பேசி காவலா் ராஜசேகா் கொலை மிரட்டல் விடுத்துவருகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.