ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஆலங்குடி அரசுக் கல்லூரியில் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்தநாள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுக் கல்லூரியில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜானகி தலைமை வகித்தாா்.
இந்தியன் ரெட்கிராஸ் புதுக்கோட்டை கிளையின் இணைச் செயலா் சா. விஸ்வநாதன் பேசினாா்.
விழாவில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலங்குடி ரெட்கிராஸ் நிா்வாகிகள் மருத்துவா் முத்தையா, ஜெயச்சந்திரன், லட்சுமி நாராயணன், கல்லூரிப் பேராசிரியா்கள் சி. மணிகண்டன், ஆரோக்யமேரி, தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.