உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
கையுந்துப் பந்து போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
மாவட்ட அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற கந்தா்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கீரனூா் அரசு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கையுந்துப் பந்து போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் முதல் பரிசைப் பெற்றனா். இதையடுத்து இந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் கருப்பையன், நிா்வாகி செந்தில்நாதன் மற்றும் தலைமை ஆசிரியா், இருபால் ஆசிரியா்கள் மாணவ- மாணவிகள் பாராட்டினா்.