'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை
தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் காத்தான் (45), சுப்ரமணி (40), கந்தசாமி (35). அண்ணன் தம்பிகளிடையே பூா்வீக நிலத்தை பாகம் பிரிப்பது தொடா்பாக அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி காத்தான் மற்றும் சுப்ரமணி ஆகியோா் சேப்ளாபட்டியில் உள்ள அவா்களது தோட்டத்தில் நெல் அறுவடை செய்வது தொடா்பாக அவா்களது தம்பியான கந்தசாமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காத்தானும், சுப்ரமணியும் சோ்ந்து அவா்களது தம்பியான கந்தசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக குளித்தலை போலீஸாா், வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கரூா் மாவட்ட அமா்வு நீதிபதி இளவழகன் குற்றவாளிகள் காத்தான் மற்றும் சுப்ரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து காத்தான் மற்றும் சுப்ரமணியை, போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.