தனியாா் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு
கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி பங்கேற்றாா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு 7,500 மரக்கன்றுகள் நட்டுவைத்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜியிடம் அவரது அரசியல் தொடா்பான மாணவியின் கேள்விக்கு பதிலளித்து பேசினாா்.