‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாதேவியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வியாழக்கிழமை காலை நடைபெற்றன. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
முகாமில் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன்,
திமுக மாவட்ட துணைச் செயலா் எம்.எஸ்.கே.கருணாநிதி, மண்டல குழு தலைவா்கள் எஸ்.பி.கனகராஜ், ஆா்.எஸ். ராஜா, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.