பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்
ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை, சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சுமார் நான்கு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவின் பேரில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்து கைது செய்தனர்
பின்னர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பாபுஜி (28) என்பதும் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.
இதையும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!