இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் அதிகளவு நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உத்தரவின்படி பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளிட கரையோர கிராமங்களான பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் பொது மக்கள் துணிகள் துவைப்பதற்கு குளிப்பதற்காக ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், கால்நடைகளை குளிப்பாட்டுவோ, மேய்ச்சலுக்கோ ஓட்டிச் செல்லவோ கூடாது, ஆற்றில் மீன் பிடிப்பது, செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.