செய்திகள் :

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

post image

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008, செப்டம்பா் 29-இல் மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்குா், முன்னாள் ராணுவ வீரர் பிரசாத் புரோஹித் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில், மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினா் விசாரித்து வந்த இந்த வழக்கு, கடந்த 2011-இல் என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.

மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குா் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்றும் அப்போது ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்த பிரசாத் புரோஹித், அபினவ் பாரத் என்ற அமைப்புக்கு வெடிமருந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் உள்ள நிலையில், மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நீதிபதி ஏ.கே. லஹோட்டி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

”மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் தான் இருந்தது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. காயமடைந்தவர்கள் 101 பேர் இல்லை 95 பேர் மட்டுமே, சில மருத்துவ சான்றிதழ்களில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வாகனத்தின் சேசிஸ் எண் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்குருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடிமருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்படவில்லை.

அபினவ் பாரத் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ஆகையால் இந்த வழக்கில் இருந்து பிரக்யா சிங், பிரசாத் புரோஹித் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

A Mumbai NIA court has ordered the acquittal of all 7 accused in the Malegaon blast case, including former BJP MP Pragya Singh.

இதையும் படிக்க : 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க

பிகாா்: வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம் - தோ்தல் ஆணையம்

பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள்... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள்!

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடா்பான கேள்விகளுக்கு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த ... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக அந்த மையத்தின் டி... மேலும் பார்க்க