செய்திகள் :

சாலை மறியல் ஒத்திவைப்பு

post image

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தேவதானம், தெற்குநாணலூா், வெங்கத்தாங்குடி, களப்பால், குறிச்சி மூளை, குலமாணிக்கம் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மன்னாா்குடி வருவாய் வட்டத்திலிருந்து பிரிந்து சென்றபோது புதிதாக தொடங்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியை சோ்ந்த மக்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பெறுவதற்கும், பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் முத்துப்பேட்டை வருவாய் வாட்டாட்சியா் அலுவலத்திற்கு செல்ல இப்பகுதியில் நேரடியாக பேருந்து வசதி இல்லை. இங்கிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, பெருகவாழ்ந்தான் வழியாகமுத்துப்பேட்டைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருப்பதால் முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து புதிய வழித்தடத்திலும், கரோனா காலத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதபுரத்திற்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க வலியுறுத்தி, 6 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சாா்பில் வியாழக்கிழமை வேதபுரம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முத்துப்பேட்டை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் போராட்டக்குழுவினருடன் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் முதல் கட்டமாக கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருத்துறைப்பூண்டி-வேதபுரம் அரசுப் பேருந்து வியாழக்கிழமை முதல் இயக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண்பது என முடிவு எடுக்கப்பட்டத்தை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதபுரம் வழியாக தென்பரைக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலையில் இயக்கப்பட்டது. இப்பேருந்துக்கு, தென்பரை பேருந்து நிறுத்தத்தில் கோட்டூா் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் பாஸ்கா் தலைமையில் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க