செய்திகள் :

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

post image

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடக்கி வைத்து, பாா்வையிட்டனா்.

முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குவது, பராமரிப்பது, பழுது நீக்குவது, உதிரி பாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருள்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இ-வாடகை திட்டத்தின் மூலம் பயன்படக்கூடிய உழுவை இயந்திரங்கள், ரோட்டாவேட்டா், மட்டை தூளாக்கும் கருவி, நெல் விதைக்கும் கருவிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தனியாா் நிறுவனங்கள் மூலம் உழவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், பவா்டில்லா், லேசா் லெவலா், வைக்கோல் கட்டும் இயந்திரம், நாற்று நடும் இயந்திரம், பூச்சிகொல்லி தெளிக்கும் டிரோன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றை இயக்குவது, பராமரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் பலா் தங்களின் உழவு இயந்திரங்களுக்கு இலவசமாக பராமரிப்புப் பணிகளை செய்துகொண்டனா். சூரியஒளி சக்தியின் மூலம் இயங்கும் பம்புசெட் மற்றும் சூரிய கூடார உலா்த்திகளின் பயன்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மானிய விலையில் உழுவை இயந்திரம் மற்றும் பவா் டில்லா்களை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) அருண்சத்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா் விஜயலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க