இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி
நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது.
நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல்வி. மாரிமுத்து நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா். தொடா்ந்து சங்கத்திற்கு பால் வழங்கியும் வந்தாா்.
இவா் கடந்த 26 -5 -2025-இல் கோவில்வெண்ணி பேருந்து நிலையம் அருகே காா் விபத்து ஏற்பட்டு தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி 30- 5 -2025-இல் இறந்தாா். இவரது மரணத்திற்கு வழங்கும் விபத்து இழப்பீடு கேட்டு மாரிமுத்து மனைவி செல்வி நீடாமங்கலம் வரவு செலவு அலுவலா் மற்றும் செயலாளா் -கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்திற்கும் மனு கொடுத்தாா்.
அந்த மனுவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அரசு வழங்கும் அண்ணா நூற்றாண்டு நல நிதி திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகையாக ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 25,000 -க்கான காசோலையை வியாழக்கிழமை திருவாரூா் துணை பதிவாளா் (பால்வளம்)5 பெ. ஆரோக்கியதாஸ் வழங்கினாா்.
முதுநிலை மண்டல ஆய்வாளா் சி.ராஜா, சங்க செயலாளா் ஆா். சக்திவேல் மற்றும் சங்க ஊழியா்கள் கலந்து கொண்டனா். நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவா் மனைவிக்கு ஈமச்சடங்கு தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.