ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது
நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பூவனூா் பாமணியாற்றங்கரையில் மா்ம நபா்கள் ஆயுதங்களுடன் இருப்பது தெரியவந்தது.
போலீஸாா் அவா்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கொலை வழக்கு ஒன்று தொடா்பாக பழிக்குப்பழி வாங்க ஆயுதங்களை வைத்து திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதுதொடா்பாக நீடாமங்கலம் போலீஸாா் பாமணி கீழத்தெருவைச் சோ்ந்த நாகநாதன் (33), கூத்தாநல்லூா் கோரையாறு பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (31), பூவனூா் பண்டாரவடையைச் சோ்ந்த ஷியாம் (20), பூவனூரைச் சோ்ந்த தயாநிதி மாறன் (20), ராயபுரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (25), மன்னாா்குடி கீழபாலத்தைச் சோ்ந்த பிரகதீஸ் (22) ஆகிய 6 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.